நிந்தவூர் அல் அஷ்ரக் பழைய மாணவர் சங்க UK கிளை உதயம் - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

நிந்தவூர் அல் அஷ்ரக் பழைய மாணவர் சங்க UK கிளை உதயம்


நிந்தவூர் அல் அஷ்ரக் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை உதயமாகியுள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஒன்று கூடலொன்று அண்மையில் லண்டன், வலன்டைன்ஸ் பூங்காவில் இடம்பெற்றிருந்த நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பழைய மாணவர்கள் தம் குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்திருந்தனர்.பாடசாலை அபிவிருத்தி பணிகளில் ஐக்கிய இராச்சிய கிளை பங்கெடுப்பதற்கும் குறிப்பாக நுழைவாயில் விஸ்தரிப்பு பணியிலும் பங்கெடுப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தமையும் இலங்கையில் இயங்கும் பாடசாலை பழைய மாணவர் அமைப்புடன் தொடர்பாடலைப் பேணி இயங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்து கொள்ளத் தவறிய ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஏனைய பழைய மாணவர்களையும் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

- Jameel I. / Arafath


No comments:

Post a Comment