UAE: பலத்த காற்றின் மத்தியில் கம்பத்தில் தொங்கிய கட்டில் - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

UAE: பலத்த காற்றின் மத்தியில் கம்பத்தில் தொங்கிய கட்டில்



ஐக்கிய அரபு அமீரகம், ரஸ் அல் கைமா பகுதியில் பலத்த காற்றினால் மரங்கள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பற்றி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் கலிலா பகுதியில் மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த கட்டில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


வீடொன்றின் வெளிப்பகுதியில் இருந்த கட்டிலே இவ்வாறு மின் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டதா? எனும் சந்தேகமும் முன் வைக்கப்பட்டுள்ளது.

புழுதியுடன் கடுங்காற்று வீசும் நிலையில் மக்கள் மக்கள் அவதானத்துடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment