மஹிந்தவிடம் கூட பணிந்து போகவில்லை: போன்சேகா - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

மஹிந்தவிடம் கூட பணிந்து போகவில்லை: போன்சேகா


மஹிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு தன்னைச் சிறைப்படுத்திய போது கூட தான் பணிந்து போகவில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் பொன்சேகா.


அண்மைய அமைச்சரர் மறு சீரமைப்பின் பின் சரத் பொன்சேகாவின் கருத்துக்களே பரபரப்பான இடத்தைப் பிடித்து வருகிறது. இந்நிலையில், அவர் மைத்ரிபாலவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோரியதாக ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவலை நேற்று மறுதலித்திருந்தார்.

அது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள பொன்சேகா, தான் மஹிந்தவிடமமே அடி பணியாத போது மைத்ரியிடம் சென்று மன்னிப்பு கேட்க எந்த அவசியமும் இல்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment