கட்சி செயலாளர் பதவியைப் பெற SB தீவிர முயற்சி! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

கட்சி செயலாளர் பதவியைப் பெற SB தீவிர முயற்சி!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியைப் பெறுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எஸ்.பி. திசாநாயக்க.


மஹிந்த - மைத்ரி என இருவருடனும் நட்புறவைப் பேணி வருவதோடு அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களையும் வெளியிட்டு வரும் எஸ்.பி. திசாநாயக்க, நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்திருந்ததன் பின்னணியில் மீண்டும் மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

எனினும், குரூப் 16 முற்றாக விலகிக் செல்லாது மைத்ரி வசமிருக்கும் கட்சியின் முக்கிய பொறுப்புகளைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. இந்நிலையில் செயலாளர் பதவியை எஸ்.பி. திசாநாயக்க குறி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment