குரூப் 16 - மஹிந்த சந்திப்பு மேலும் தாமதம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

குரூப் 16 - மஹிந்த சந்திப்பு மேலும் தாமதம்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் பினாமித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பின் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குரூப் 16 உறுப்பினர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ள மஹிந்த அணி கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. எனினும் தற்சமயம் தனி அணியாக இக்குழு இயங்கி வருவதோடு மைத்ரியின் தலைமையையே ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கிறது.

இந்நிலையில், இன்று இடம்பெறவிருந்த சந்திப்பை 23ம் திகதிக்குப் பின்போட்டுள்ளதாக குரூப் 16 சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment