PRF சமூக சேவை அமைப்பின் ரமழான் வினா-விடைப் போட்டி - sonakar.com

Post Top Ad

Thursday 10 May 2018

PRF சமூக சேவை அமைப்பின் ரமழான் வினா-விடைப் போட்டி


நிந்தவூரில் கடந்த 8 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பின் சமய மற்றும் கலாச்சார அபிவிருத்தி பிரிவினரால் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வினா விடைப் போட்டி ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



ஒரு சமூகத்தினை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அச்சமூகத்தின் வரலாற்றை மறக்கடிக்க செய்தலே போதுமானதாகிவிடும். அந்த வகையில் நாம் வாழுகின்ற சூழலில் நம் வரலாறுகளை அறிந்திருத்தல் ஒவ்வொருவர் மீதும் கட்டாய கடமையாகும்.

இவ்வினா விடை போட்டியில் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள், இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் மற்றும் இஸ்லாமிய விடயங்களை உள்ளடக்கியதாக மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படும். ( வினாக்கள் ரமழான் மாதத்தின்  முதல் நான்கு நாட்களும் ஒரு நாளைக்கு 5 வினாக்கள் வீதம் PRF சமூக சேவை அமைப்பின் FB Page இல் வெளியிடப்படும்)


சரியான விடைகளை பதிவுத் தபால் மூலமாக அனுப்புவதாயின் 31.05.2018 க்கு முன்னர்  பின்வரும் முகவரிக்கோ அல்லது PRF சமூக சேவை அமைப்பின் Messengerக்கு அனுப்புவதாயின் 09.06.2018க்கு முன்னர் பின்வரும் தகவல்களை உள்ளடக்கி அனுப்பி வைக்க முடியும்.

உள்ளடக்கப்பட வேண்டிய தகவல்கள்.
(பங்குபற்றுபவரின் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பாடசாலையின் பெயரும் சுட்டிலக்கமும்)

விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி.
AAM. Naashif
PRF சமூக சேவை அமைப்பு 
16, Wellas kaddu Road
Nintavur-25
#32340

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் நபர்களை தொடர்பு கொள்ளலாம்.

SM Saheeth :075 2752525
TM Insaf : 077 6663363
A.Athharul Haq : 075 5894636

-Sameen Mohamed Saheeth 

No comments:

Post a Comment