92வது வயதில் மீண்டும் மலேசிய பிரதமரானார் மஹதிர் முஹம்மத்! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

92வது வயதில் மீண்டும் மலேசிய பிரதமரானார் மஹதிர் முஹம்மத்!


தனது 92வது வயதில் மீண்டும் மலேசிய பிரதமராகத் தெரிவாகி, தேர்தல் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் வயது கூடிய தலைவர் எனும் பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார் 22 வருடங்கள் மலேசியாவின் பிரதமராகக் கடமையாற்றிய அனுபவமுள்ள மஹதிர் முஹம்மத்.1957ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது முதல் அறுபது ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்திருந்த பரிசன் நெஷனல் கட்சியை தோற்கடித்துள்ள மஹதிர், முன்னர் அதே கூட்டணிக்குத் தலைமை தாங்கி வழி நடாத்தியிருந்தவராவார். 

பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சியில் ஊழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் வெறுப்படைந்த மக்கள் 60 வருடங்கள் ஆட்சியிலிருந்த கூட்டணிக் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்து முன்னாள் பிரதமருக்கு அமோக வெற்றியைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment