எங்களுக்கும் அணு ஆயுதம் தேவைப்படும்: சவுதி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

எங்களுக்கும் அணு ஆயுதம் தேவைப்படும்: சவுதி!


ஈரான் அணு ஆயுத வல்லமையைப் பெறுமாக இருந்தால் சவுதி அரேபியாவும் அணு ஆயுத அபிவிருத்தியில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்-ஜுபைர்.


ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈரான் அணு ஆயுத அபிவிருத்தியில் ஈடுபடுமாக இருந்தால் தமது நாட்டுக்கும் அது அவசியப்படும் என அல் ஜுபைர் மேலும் தெரிவித்துள்ளார். சவுதி மற்றும் இஸ்ரேல் அமெரிக்காவின் முடிவை வரவேற்றுள்ள அதேவேளை ஐரோப்பிய நாடுகள் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் பேணவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா ஊடாக பெறப்பட்ட பொருளாதார நன்மை ஐரோப்பா ஊடாக பெறக்கூடியதாக இருந்தால் தாம் அணு ஆயுத அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் தேவையில்லையென ஈரானும் தெரிவித்துள்ளமையும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment