சமுர்தியை 'கட்சிகள்' பயன்படுத்த அனுமதிக்க முடியாது: JHU - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

சமுர்தியை 'கட்சிகள்' பயன்படுத்த அனுமதிக்க முடியாது: JHUசமுர்தி வங்கியை ஐக்கிய தேசியக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ தமது தமது கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளது ஜாதிக ஹெல உறுமய.


இலங்கையில் ஆறு வீத மக்களே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும் ஆனாலும் இரு கட்சிகளும் மாறி மாறி அரச வளத்தைத் தமது கட்சிக்கு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய மேலும் தெரிவித்துள்ளது.

சமுர்தி வங்கியி ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படக்கூடாது என ஏலவே சு.க உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post a Comment