இந்தியா: மேலும் ஒரு சிறுமி எரியூட்டல்; வன்புனர்வு! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

இந்தியா: மேலும் ஒரு சிறுமி எரியூட்டல்; வன்புனர்வு!


இந்தியா, ஜர்கந் மாநிலத்தில் 16 வயது சிறுமி வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்று மேலும் ஒரு 17 வயது சிறுமி இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சிறுமி மீது மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டியதன் பின்னணியில் அதே இடத்தைச் சேர்ந்த 19 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவம் 70 வீத தீக்காயங்களுக்குள்ளாகியுள்ள சிறுமி உயிர் பிழைக்க வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலாவது சம்பவத்தில் குற்றவாளிக்கு 100 தடவைகள் தோப்புக்கரணம் போடுவதோடு ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதித்து ஊர்ப் பஞ்சாயத்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment