ஈரான் அணு ஒப்பந்தம்: அமெரிக்காவின் முடிவுக்கு EU எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

ஈரான் அணு ஒப்பந்தம்: அமெரிக்காவின் முடிவுக்கு EU எதிர்ப்பு!


ஈரான் அணு ஆயுத தயாரிப்பை  நோக்கி நகர்வதைத் தவிர்க்கு முகமாக ஒபாமா நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.


ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட ஐரோப்பிய யூனியன் இச்சூழ்நிலை உருவாவதைத் தடுக்க பாரிய முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாம் தொடர்ந்தும் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கப் போவதாக இந்நாடுகள் தெரிவிக்கின்றன.

எனினும், அமெரிக்காவின் அறிவிப்புக்கு பதிலடியாக தாம் உடனடியாக யுரேனிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முடுக்கிவிடப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment