தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே அவசியம்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே அவசியம்: மைத்ரி


30 வருட கால யுத்தம் நிறைவுற்ற போதிலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தைத் தரக்கூடிய அரசியல் தீர்வின் அவசியம் குறித்த நகர்வுகள் போதியளவு மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை இன்னும் ஓயவில்லையென சர்வதேச ரீதியில் குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் தேசிய சக்திகள் கவனம் செலுத்தி தீர்வைத் தர ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

இதேவேளை, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 'பதவிகளை' வழங்குவதும் அதன் மூலம் அவர்கள் தமக்கு நெருங்கியவர்களுக்கு பதவி நியமனங்களை வழங்குவதுமே சிறந்த தீர்வென மைத்ரிபால சிறிசேன நம்பிக்கொண்டிருக்கின்றமையும் முஸ்லிம் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment