ஜனாதிபதி ஊடக பிரிவு 'ட்விட்டர்' சர்ச்சை; CID விசாரணை! - sonakar.com

Post Top Ad

Wednesday 9 May 2018

ஜனாதிபதி ஊடக பிரிவு 'ட்விட்டர்' சர்ச்சை; CID விசாரணை!


ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிராக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட 'ட்விட்டர்' தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதன் பின்னணியில் ஜனாதிபதி ஊடக பிரிவின் ட்விட்டர் கணக்கூடாக வெளியான தகவலை ரீ-ட்வீட் செய்த பிபிசி ஊடகவியலாளர் அசாம் அமீன் நாளைய தினம் சி.ஐ.டி விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.

இது குறித்து சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பால் அசாம் அமீனுடன் இன்று மாலை தொலைபேசியூடாக பேசிய போது, ஒரு வேளை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தொழிநுட்பக் கோளாறாக இருக்கலாம், தன்னைப் பொறுத்தவரை தான் பார்த்ததை ரீ ட்வீட் செய்ததாக மாத்திரமே கூற முடியும் என அசாம் விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை, வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு, அசாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவினரே ஜனாதிபதிக்கு "உங்கள் வாக்குறுதிகளை செயற்படுத்திக் காட்டுங்கள்"  என தெரிவிக்கும் வகையில் குறித்த ட்விட்டர் செய்தி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment