பிரதி சபாநாயகர் யார்? சபையில் சலசலப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

பிரதி சபாநாயகர் யார்? சபையில் சலசலப்பு!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னணியில் தனது பிரதி சபாநாயகர் பதவியைத் துறப்பதாக அறிவித்திருந்த திலங்க சுமதிபால தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.


இந்நிலையில், அப்பதவி யாருக்கு வழங்கப்படப் போகிறது என இன்று சபையில் கேள்வியெழுப்பப் பட்டிருந்தது. இதன் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அப்பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதனடிப்படையில் திலங்க தொடர்ந்தும் பிரதி சபாநாயகராகப் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பப்பட்டிருந்தது.

எனினும், திலங்க பதவி விலகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், திலங்கவின் இராஜினாமா கடிதம் உத்தியோகபூர்வமாக இன்னும் தம்மை வந்தடையவில்லையென  சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment