எதிர்ப் பக்கம் அமர்ந்த குரூப் 16; JO வரவேற்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

எதிர்ப் பக்கம் அமர்ந்த குரூப் 16; JO வரவேற்பு!நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் நாடாளுமன்றின் 2வது கூட்டத்தொடரின் ஆரம்பத்தோடு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளனர்.


இவ்வாறு எழுந்து சென்று எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட குரூப் 16 உறுப்பினர்களுக்கு கூட்டு எதிர்க்கட்சி பலத்த வரவேற்பளித்திருந்தது.

குறித்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் உள்ளடக்கம். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றியே ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment