இலங்கையில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்: அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

இலங்கையில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்: அமெரிக்கா!


இலங்கையில் சிறுபான்மை மக்கள் இனரீதியாக இலக்கு வைக்கப்படுவது தொடர்வதாக 2017ம் ஆண்டுக்கான தமது சர்வதேச மத சுதந்திரத்துக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது அமெரிக்கா.


2016ஐத் தழுவி 2017லும் இத்தாக்குதல்கள் தொடர்ந்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மதத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் என 97 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதே போன்று பொது பல சேனா போன்ற அமைப்புகள் ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவிரோத தாக்குதல்கள் தொடர்வதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 2018லும் யுத்த நிறைவுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment