வவுனியா: வீட்டுக்குள் புகுந்து 8 மாத குழந்தை கடத்தல் - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

வவுனியா: வீட்டுக்குள் புகுந்து 8 மாத குழந்தை கடத்தல்


வவுனியா பிரதேசத்தில் தாயும் குழந்தையும் வாழ்ந்து வீடொன்றுக்குள் இன்று அதிகாலையில் உட்புகுந்த குழுவொன்று அங்கிருந்து 8 மாத கைக்குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தனது கணவர் லண்டனில் வாழ்வதாகவும் தமக்கிடையில் அண்மைக்காலமாக மனக் கசப்பு நிலவி வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தாய் தெரிவிக்கிறார்.

கணவரது ஏற்பாட்டில் இவ்வாறு நடந்திருக்கக் கூடும் என அவர் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment