கூட்டாட்சி 'உருப்படியாக' எதையும் செய்யவில்லை: சமல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

கூட்டாட்சி 'உருப்படியாக' எதையும் செய்யவில்லை: சமல்!


மைத்ரி - ரணில் கூட்டாட்சி இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.


கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர், நடைமுறை அரசு பதவிக்கு வந்த காலந்தொட்டு அடுத்தவர் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறதே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லையெனவும் இதனால் மக்கள் ராஜபக்ச ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் எனும் மன நிலைக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சமல், கோத்தா ஆகிய இருவரில் ஒருவரை கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி  வேட்பாளராக்கக்கூடிய வாய்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment