நீதிமன்ற அவமதிப்புக்கும் ஞானசார தண்டிக்கப்பட வேண்டும்: ச.மா. அதிபர் - sonakar.com

Post Top Ad

Thursday 31 May 2018

நீதிமன்ற அவமதிப்புக்கும் ஞானசார தண்டிக்கப்பட வேண்டும்: ச.மா. அதிபர்


ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்யா எக்னலிகொடவை அச்சுறுத்திய விவகாரத்தில் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலும் ஞானசாரவைத் தண்டிக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.


குறித்த தினம் (25-01-2016) நீதிமன்றுக்குள் அடாவடியாகப் புகுந்த ஞானசார அங்கு வழக்கின் சாட்சியாக சமூகமளித்திருந்த திருமதி எக்னலிகொடவைத் தூற்றியது அச்சுறுத்தியிருந்ததன் பின்னணியில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து அவமதித்ததற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் ஜுன் 5ம் திகதி பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment