நீதிமன்ற ஆவணங்களை எரியூட்டிய நபருக்குப் பிணை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

நீதிமன்ற ஆவணங்களை எரியூட்டிய நபருக்குப் பிணை!


பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்ற ஆவணக் களஞ்சியத்தை எரியூட்டிய நபர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.குறித்த நபருக்கு எதிராக ஏலவே பண்டாரவளை நீதிமன்றில் மாத்திரம் 11 வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார் நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் எதுவும் தீக்கிரையாகவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு நீதிமன்ற ஆவண களஞ்சியத்தை எரியூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment