லெபனான்: தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

லெபனான்: தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு!


2009ம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக லெபனானில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கு எதிரான தமது அமைப்பின் நிலைப்பாட்டுக்கு மீண்டும் மக்கள் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா அறிவித்துள்ளார்.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அரசை எதிர்த்து வரும் மேற்குலக ஆதரவுடனான எதிர்க்கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் மூன்று பங்கு ஆசனங்களை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment