மஹ்மூத் அப்பாஸ் வைத்தியசாலையில் அனுமதி! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

மஹ்மூத் அப்பாஸ் வைத்தியசாலையில் அனுமதி!


82 வயதான பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவு அமைப்பின் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, பலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அரபாத் இஸ்ரேலியர்களினால் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றமையும் அப்பாஸ் - ஹமாஸ் பிரிவினை காரணமாக 2005ம் ஆண்டுக்குப் பின் அங்கு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாமையும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் அடுத்த தலைவர் ஒருவர் இதுவரை இனங்காட்டப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment