மஹதிரின் 'அதிரடி' நடவடிக்கைகள் எல்லாம் 'பொய்': மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

மஹதிரின் 'அதிரடி' நடவடிக்கைகள் எல்லாம் 'பொய்': மைத்ரி!


மலேசியாவின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மஹதிர் முஹம்மத், பதவியேற்று ஐந்து நாட்களுக்குள் அமைச்சர்கள், முன்னணி வர்த்தகர்கள், நீதிபதிகளை அதிரடியாகக் கைது செய்ததாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


சோபித தேரரின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் 'அழையா' விருந்தாளியாகக் கலந்து கொண்ட மைத்ரிபால அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சோபித தேரர் கனவு கண்ட நல்லாட்சி கனவாகவே இருக்கிறது என சித்தார்த்த தேரர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த மைத்ரி, மஹதிரால் முடிந்ததை மைத்ரியால் ஏன் செய்ய முடியவில்லையென மக்கள் கேட்பதாகவும் முதலில் மஹதிர் அவ்வாறு எதையும் இதுவரை செய்யவில்லையெனவும் அப்படி நடந்திருந்தால் அந்த நாட்டில் சட்டம் என்று ஒன்றில்லையென அர்த்தமாகிவிடும் எனவும் தெரிவித்ததோடு தமது அரசு பலலை முறையாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment: