மாதாந்த கொடுப்பனவை மக்கள் தேவைகளுக்கு வழங்கும் ஷிப்லி பாரூக் - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

மாதாந்த கொடுப்பனவை மக்கள் தேவைகளுக்கு வழங்கும் ஷிப்லி பாரூக்


நகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச் செய்து அதனை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்தார்.


இதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி MRF. றிப்கா அவர்களுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தபால் மூலம் அனுப்பி வைத்தார்.

மேலும் தான் கலந்துகொண்ட முதலாவது நகர சபை அமர்விலேயே நகர சபை அமர்வுகளின்போது தனக்கு வழங்கப்படும் சிற்றுண்டிக்கான செலவினை தனது சொந்த நிதியில் இருந்து நகர சபைக்கு மீள வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

-எம்.ரீ. ஹைதர் அலி

No comments:

Post a Comment