"100 நாள் முட்டாள் திட்டம்" மைத்ரிக்கு பதிலளிப்போம்: UNP - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

"100 நாள் முட்டாள் திட்டம்" மைத்ரிக்கு பதிலளிப்போம்: UNPபொது வேட்பாளராகத் தான் வெற்றி பெற்ற பின் கொண்டு வரப்பட்ட 100 நாள் அரசுத் திட்டம் ஒரு முட்டாளத் திட்டம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் பதிலளிக்கும் என தெரிவிக்கிறது.

அத்திட்டத்தை உருவாக்கியவர் யார் எனத் தெரியாது என கூறியுள்ள மைத்ரி அது போன்ற ஒரு முட்டாள்த் திட்டத்துக்கு தான் இணங்கியது குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன் பதவிக்கு வந்ததும் உடனடியாகத் தான் நாடாளுமன்றைக் கலைத்திருக்க வேண்டும் எனவும் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பற்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சித்து வருவதாகவும் அன்று ஸ்ரீலசுகட்சியின் தலைமைப் பொறுப்பைத் தான் ஏற்றிருக்காவிட்டால் 100 நாள் வரவு-செலவுத் திட்டத்தையாவது நிறைவேற்றியிருக்க முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளதுடன் ஸ்ரீலசுகட்சியின் உதவியின்றி ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றியிருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அண்மையில் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீலசுக பங்களிப்பின்றி வென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்னர் தனியாட்சி குறித்து பேசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment