யாருக்கும் 'பணம்' கொடுக்கவில்லை: அவன்ட்கார்ட் தலைவர் - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

யாருக்கும் 'பணம்' கொடுக்கவில்லை: அவன்ட்கார்ட் தலைவர்பொலிஸ் உயரதிகாரிகள் 300 பேருக்கு அவன்ட்கார்ட் நிறுவன தலைவர் முன்னாள் மேஜர் நிசங்க சேனாதிபதி குறைந்தபட்சம்  தலா 1 லட்ச ரூபா பணம் கொடுத்ததாக அரச ஊடகங்கள் வெளியிட்ட தகவலை அவர் நிராகரித்துள்ளார்.பணம் பெற்ற பொலிசாரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்கவோ தன்னிடம் யாரும் கேட்கவோ இல்லையென தெரிவிக்கிறார்.

எனினும், தமது நிறுவனம் முப்படையினரின் நிகழ்வுகளுக்கு 'அனுசரணை' வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment