இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு; பலஸ்தீன நபர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு; பலஸ்தீன நபர் பலி!


சர்வதேச நிலைப்பாட்டைப் புறக்கணித்து அமெரிக்கா தன்னிச்சையாக ஜெரூசலத்தில் தூதரகத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இன்று காலை 21 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் புதல்வி இவன்கா இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று ஒரு 'சோக நாள்' என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment