கரையோர மக்களின் நம்பிக்கை நிஜமாகுமா? - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

கரையோர மக்களின் நம்பிக்கை நிஜமாகுமா?


இலஞ்சம், ஊழல், மோசடி அற்ற நாட்டை உருவாக்கும் இலக்குடன் பல்வேறு வாக்குறுதிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டே நல்லாட்சி அரசாங்கம் 2015ல் உருவானது. நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல் நிறைவேற்றப்பட வில்லை என்பது மக்களின் கவலையாகும்.

தெற்கிலும், வடக்கு மற்றும் கிழக்கிலும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் அரசாங்கத்தின் தற்போதைய நிலையை கவலையோடு அவதானித்து வருகின்ற நிலையில,; தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற அமைச்சரை மறுசீரமைப்பு மக்களுக்கான அபிவிருத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிருக்கிறது என்ற கேள்வியும்  மக்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது 

இந்நிலையில்தான், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  நான்கு பாராளுமன்ற உறுபபினர்கள் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகள் மற்றும்  வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவும், அரச தொழில் முயற்சி  அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்திப் பிரதி அமைச்சராக எச்.எம்.எம். ஹரிஸும், கடல்றொழில், கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சராக அமீர் அலியும்,  தேசிய சகவாழ்வு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக அலிஸாகிர் மௌலானாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கட்சிகள் பலவற்றை இவ்வமைச்சர்கள் சார்ந்திருந்தாலும் இந்நான்கு அமைச்சர்களும் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கிழக்கில் தேங்க நிலையில் காணப்படும் அபிவிருத்திகளை முன்கொண்டு செல்ல இந்நான்கு அமைச்சர்களும் கூடவே சுகாதார பிரதி அமைச்சரும் இனைந்து செயற்பட்டால் கிழக்கு வாழ் அனைத்துச சமுகங்களினதும் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்க முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில்,  கரையோர மக்களின் மிக நீண்டகால கனவாகவும் தேர்தல் கால வாக்குறுதியாகவும் இருந்து வரும் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில்பாதை அபிவிருத்திச் செயற்தி;ட்டத்தை இவர்கள் இணைந்து முன்னெடுக்க முயற்சிக்க வேண்டுமென்பது கரையோர மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளதோடு காத்திருப்பாகவுமுள்ளது,

மறுசீரமைக்கப்பட்ட அமைச்சுப் பதிவிகளை ஏற்றுள்ள இந்நான்கு  அமைச்சர்களில் மூன்று தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்டவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா என்பதை கிழக்கு மாத்திரமல்ல முழு நாடே அறிந்ததுதான்;. அதற்குச் சாட்சியாக . பௌத்த கடும்போக்காளர்களின் கண்களைக் குத்திக்கொண்டிருக்கும் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவேவுள்ள பேரீச்சை மரங்கள் போதுமானவை. இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு மேலும் உரமூட்டும் வகையில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. இந்நிலையில்தான் கிழக்கு கரையோர மக்களின் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில்பாதையைக் கானும் கனவையும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணமும் ரயில் சேவையும்

கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மாகாணமாகும். இம்மாகாணத்தில் திருகோணமலை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களே அதிகளவு  சனத் தொகையைக் கொண்ட பிரதேசங்களாகவுள்ளன.

கடந்த காலங்களில் இம்மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் பல்வேறு வகையிலும் இம்மாகாண மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தனர். குறிப்பாக சுதந்திரமாக, அச்சமின்றி போக்குவரத்துச் செய்ய முடியாதொரு நிலை அன்று காணப்பட்டது.  

அச்சூழ்நிலைகளிலிருந்து இம்மாகாண மக்கள் விடுபட்டு, சுதந்திரமாகவும் பயமின்றியும் பயணிக்கக் கூடியதொரு நிலை யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் காணப்படுகின்றபோதிலும,; மக்கள் எதிர்பார்க்கும்  போக்குவரத்து வசதிகள் அதிலும் ரயில் போக்குவரத்து இம்மாணத்தின் சகல பிரதேசங்களுக்கும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நாட்டை ஆண்ட மேற்கத்தியவாதிகள் தங்களின் சுரண்டல் பொருளாதாரத்தை மையப்படுத்தி அவற்றை விருத்தி செய்வதற்காக இந்நாட்டில் முன்னெடுத்த திட்டங்களில் பயனளிக்கத்தக்க திட்டமாக அமையப்பெற்றதுதான் ரயில் போக்குவரத்தாகும். இந்நாட்டல் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ரயில் போக்குவரத்தில் கிழக்கின் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்துக்கான திட்டமானது மட்டக்களப்பு நகருடன் மட்டுப்படுத்தப்பட்டது. அதற்கப்பால் ரயில் மார்க்கம் விரிவுபடுத்தப்படவில்லை. ரயில் பாதை விஸ்தரிப்பு நடவடிக்கையானது பொத்துவில் வரை மேற்கொள்ளப்படாது தவிர்க்கப்பட்டது குறித்த கவலையும் பொத்துவில் வரையான ரயில் பாதையைக் காணும்; தாகமும் இன்றும்  கிழக்கு கரையோரப் பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கையில் பொரும்பாலும் தலைநகர் கொழும்பை மையப்படுத்தியே சகல பிரதான போக்குவரத்து மார்க்கங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக புகையிரத சேவையானது கொழும்பு புறக்கோட்டை புகையிரத மத்திய நிலையத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. 

1864ஆம் ஆண்டு இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ரயில் பாதை கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸைக்குமிடையே நிர்மானிக்கப்பட்டது. பொருளாதார தேவையை நோக்காகக் கொண்டு  தொடங்கப்பட்ட புகையிரத சேவையானது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய தேயிலை மற்றும் கோப்பி என்பவற்றை மலையகத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவருவதற்காக ஆரம்ப காலத்தில் உபயோகப்பட்டது. 

பல வருடங்களாக உற்பத்திப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக விளங்கிய புகையிரதமானது, அதிகரித்த மக்கள் சனத்தொகை கருத்திற்கொள்ளப்பட்டு  பயணிகள் போக்குவரத்து சாதனமாக மாறியது.

1905ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு விஸ்தரிக்கபட்ட புகையிரத சேவையானது கிழக்கு மாகாணத்துக்கு 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓரே ஆண்டில் கிழக்கின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர சேவை மட்டக்களப்புக்கான புகையிரத சேவையாகும். கிழக்கு மாகாணத்தின்  3 மாவட்டங்களிலும் திருகோணமலைக்குரிய புகையிரத சேவைக்கான பாதை சீனக்குடா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான புகையிர சேவைக்கான பாதை மட்டக்களப்பு நகர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில,; இப்பாதை விஸ்தரிப்பை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வற்கான  வாய்ப்புக்கள் உள்ள போதிலும,; அது தொடர்பில் கடந்த காலங்களில்; கவனம் செலுத்தப்படவில்லை. 

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை ரயில் பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் போக்குவரத்தை விஸ்தரிப்பு செய்வதற்கு எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய போக்குவரத்து அதிகார சபையின் 2013ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம் நாடுபூராகவும் 147 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றினூடாக ஏறக்குறைய 124,000 பயணிகள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதில் 10 பிரதான நிலையங்ளினூடாக 50 வீதமான பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு காலை, மாலையில் இரு மெல்ல நகரரும்  சேவையும் இரவில் ஒரு கடுகதி ரயில் சேவையுமாக மூன்று சேவைகள் தினமும் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய ஆயிரம் பயணிகள் தினமும் ரயில்;களினூடாக பயணிப்பதனால் புகையிரதத் திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு சராசரி 2 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெறுவதாக மட்டக்களப்பு ரயில் நிலையத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

ஆனால், இப்புகையிரத சேவையினால் மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாட்டங்களிலுள்ள தூரப் பிரதேச மக்களினால் பயன்பெற முடிவதில்லை. குறிப்பாக கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் அம்பாறை போன்ற தூரப் பிரதேச மக்களுக்கு இப்புகையிரத்தினூடாக கொழுப்புக்குச் செல்வதும் கொழும்பிலிலிருந்து தங்களது பிரதேசங்களுக்கு வருவதும் சிரமங்கள்மிக்கதாகவேவுள்ளது.. இதற்குக் காரணம் இப்புகையிரத சேவையானது மட்டுநகரிலிருந்து விஸ்தரிக்கப்படாமையாகும்.

'குறைந்த தொழிற்பாட்டுச் செலவுடன் தரைமார்க்கப் போக்குவரத்து முறைமையொன்றை அபிவிருத்தி செய்து, பொருளியல் ரீதியில் எமது போட்டி நிலைமையை மேம்படுத்துவதும் எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமான திறமையான சிக்கனமான போக்குவரத்து முறையொன்றை மீளக்கட்டியெழுப்புதல்;' என்ற நோக்கை இலக்காகக் கொண்டுள்ள இலங்கையின் புகையிரத மற்றும் போக்குவரத்து துறையானது கிழக்கின் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை, அதற்கான பாதையை பொத்துவில் வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் இம்மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

கரையோர ரயில் பாதையும் மறைந்த அமைச்சர் மன்சூரின் முயற்சிகளும்

மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும். கிழக்கின் மடடக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும். அதற்காக மட்டக்களப்பு – பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் 1992 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் ஆட்சியில் வர்த்தக, வாணிப்பத்துறை அமைச்சராகவும் கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும்; இருந்த ஏ.ஆர்.எம். மன்சூர் முயற்சி  மேற்கொண்டார். 

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னால் அமைச்சர் மன்சூர்; மேற்கொண்டார். அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியில் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர். விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில,; 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் காரணமாக இத்திட்டம் முன்நோக்கி நகர்த்தப்படாது கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இப்பாதை விஸ்தரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் பின்னர் வந்த அதிகாரம் படைத்தவர்களினால் முன்னெடுக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, வரலாறுகள் என்றும் நினைவு கூறக் கூடிய பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும,; அமைச்சர் மன்சூரினால் முன்னெடுப்பட்ட இம்முக்கியத்துவமிக்க மட்டக்களப்பு - பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்பை உரிய காலத்துக்குள் முடித்துக்கொள்ள அக்கறைகாட்டாமல் போனது இப்பிரதேச மக்களுக்கு நிகழ்ந்த பெரும் துரஷ்டவசம் என்றே சொல்ல வேண்டும். 

1992ஆம் ஆண்டு மறைந்த அமைச்சர் மன்சூரினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி முற்றுப்பெறாமல் தொடரப்பட்டிருந்தால் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம் பெரும் நன்மையடைந்திருக்கும் என்பது யதார்த்தமாகும். மக்களின் வாழ்வு செழிப்புற பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். சகலவாழ்வும் கட்டியெழுப்ப்பட்டிருக்கும்.. 

மட்டகளப்பு முதல் பொத்துவில் வரையான தூரம் ஏறக்குறைய 100 கிலோமீற்றர்களாகும். 1993ஆம் ஆண்டு முதல் இற்றைவரை 25 வருடங்கள் கழிந்தோடியுள்ளன. மறைந்த அமைச்சர் மன்சூர்; முன்னெடுத்த திட்டமானது அவரின் அரசியல் அதிகாரத்தோடு நின்றுவிடாது, பின்னர் வந்த  அரசியல் அதிகாரங்களைக் பெற்றுக்கொண்டவர்களினால் ஒரு வருடத்துக்கு 4 கிலோமீற்றர் தூரம் வரை இப்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகயை மேற்கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்று பொத்துவில் வரை ஒரு புகையிரத சேவையை, பாதையைக்; கண்டிருக்க முடியும். மக்களின் தாகம் தீர்க்கப்பட்டிருக்கும்.

ஒருவர் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு நன்மையுள்ளதாக அமையுமாயின் அத்திட்டம் அவரால் நிறைவு செய்ய முடியாது போகும் நிலையில், பின்னர் வருபவர்களினால் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும். அதுதான் நாகரியமான அரசியல் சிந்தாந்தம் தெரிந்தவர்களின் நல்ல மனப்பாங்காகும.; அந்த மனப்பாங்கு இன்றுள்ள அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் உருவாக வேண்டுமென்பதே ஜனநாயகவாதிகளினதும் நல்லுள்ளம் கொண்டோரினதும் அவாவாகும். 

இருப்பினும்,  மறைந்த  முன்னால் அமைச்சர் மன்சூரின் கனவு நிஜமாக்கப்படுவதிலும்;; கரையோரமக்களின் காத்திருப்பு நிறைவேற்றப்படுவதிலும்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா முக்கிய வகிபாகம் வகிப்பார் என்பது கரையோர மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், மறைந்த அமைச்சர் மன்சூரின் அரசியல் அதிகாரங்களினூடாக பல்வேறு அபிவிருத்திகளை காத்தான்குடி மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவர் என்ற வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற ஏறக்குறைய 30 வருட கால அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற வகையிம் கைவிடப்பட்ட இந்த மட்டக்களப்பு முதல் பொத்துவில் ரயில் பாதை விஸ்தரிப்புத் திட்டத்தை முன்கொண்டு செல்வார் என்ற கரையோர மக்களின் நம்பிக்கையாகும் இந்நம்பிக்கை நிஜமாகுமா?

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment