மூதூர் ஷாபி நகரில் விழிப்புணர்வு கருத்தமர்வு - sonakar.com

Post Top Ad

Monday 14 May 2018

மூதூர் ஷாபி நகரில் விழிப்புணர்வு கருத்தமர்வு


முஸ்லிம் எய்ட் இன் ஏற்பாட்டில் ‘போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் என்ற தொனிப்பொருளில் அமைந்த கருத்தமர்வு மூதூர் ஷாபி நகர் சுகாதார நிலையத்தில் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தமர்வில் வெறுகல் ஈச்சழப்பத்து ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.ஹாரிஸ் பிரதான வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை  வழங்கினார்.


கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பொதுவாக பெண்கள்சிறார்களுக்கும் போசாக்குணவின் முக்கியத்துவம்போசாக்குணவுகள் என்றால் என்னதற்போதுள்ள உணவுக் கலாசாரத்தின் சீர்கேடுகள்விவசாயக் கிராமம் என்ற வகையில் நமதுஉணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்வதை நோக்கி இக் கிராம மக்கள் பயணித்தல்வீட்டுக்கு வீடு ஆரோக்கிய உணவுகளை உற்பத்தி செய்வதன் மூலமாக நமது ஆரோக்கியத்தையும் நமது எதிர்கால சிறார்களின்ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்குஆரோக்கியமான குழந்தைகளைப் பிரசவிப்பதில் தாய்மார்கள் உடல் மற்றும் மனநிலையில் ஆற்றும் பங்கு போன்ற விடயங்களை வைத்தியரினால் மிகவும்தெளிவான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டன.

60 இற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களும்ஆர்வமுள்ள தாய்மார்களும்பெண்களும் இதில்கலந்து கொண்டதோடு,  நிகழ்வின் இறுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45    போஷாக்குணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment