அவன்ட்கார்ட் தலைவரிடம் 'பணம்'; சிக்கலில் பொலிஸ் அதிகாரிகள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

அவன்ட்கார்ட் தலைவரிடம் 'பணம்'; சிக்கலில் பொலிஸ் அதிகாரிகள்!


அவன்ட்கார்ட் நிறுவன தலைவர் முன்னாள் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற முக்கிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.



சுமார் 300 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆகக்குறைந்தது தலா ஓரு லட்சம் ரூபா இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பணம் வழங்கப்பட்ட காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவன்ட்கார்ட் ஊழல் விவகாரத்தில் கைதாகிப் பிணையில் விடுதலையான நிசங்க, அண்மைய விசாரணையின் போது இவ்வாறு 300 பொலிசாரின் பெயர்ப்பட்டியலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment