விஜிதபுரயில் மேர்வின் சில்வா அட்டகாசம்; சஜித்துக்கு சேலை! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

விஜிதபுரயில் மேர்வின் சில்வா அட்டகாசம்; சஜித்துக்கு சேலை!


விஜிதபுர புராதன முக்கியத்துவம் வாய்ந்த இபலோகம பகுதியில் குடியிருப்பு ஒன்றை உருவாக்கவென வீடமைப்பு அதிகார சபை மேற்கொண்ட முயற்சி சர்ச்சையில் முடிவடைந்துள்ள நிலையில் அங்கு சென்ற மேர்வின் சில்வா, குடியிருப்புத் திட்டத்துக்காக நடப்பட்டிருந்த அடிக்கல்லை கழற்றி வீசி அட்டகாசம் புரிந்துள்ளார்.


பிரேமதாச காலத்திலிருந்து புதையல் தேடி இவ்வாறான புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பறிபோயுள்ளதாகவும் தற்போதைய அமைச்சருக்கு இவற்றைப் பாதுகாக்க முடியாதுள்ளதால் அவருக்கு சேலை அணிவிக்க வேண்டும் எனவும் மேர்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலில் இடம் தேடிக் கொண்டிருக்கும் மேர்வின், ஏலவே ஞானசார உட்பட கடும்போக்கு சக்திகள் தலையிட்டு முடிவுக்கு வந்த விவகாரத்தை மீண்டும் கிளறச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment