கண்டி வன்முறை: அரசின் பொடுபோக்கு தொடர்பில் பிரஜைகள் குழு அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

கண்டி வன்முறை: அரசின் பொடுபோக்கு தொடர்பில் பிரஜைகள் குழு அதிருப்தி


கண்டியை அண்மித்த பிரதேசங்களில்  இடம் பெற்ற வன்முறை தொடாபாக  அரசு இன்னும் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ள கண்டி பிரஜைகள் ஆணைக்குழு இப்பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.

கண்டியை மையமாகக் கொண்டு இயங்கும் கண்டி பிரஜைகள் குழு, சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் சேர்ந்து இவ்வாணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

 'இலங்கை வன்முறைகளை ஒழிக்கும் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கான பிரஜைகளின் ஆணைக்குழு' என்ற மேற்படி ஆணைக்குழு முன் கண்டி வித்தியார்த்த கல்லூரியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது மாணவன் சமக்க கசுன் பண்டார என்பவர் உற்பட பேராசிரியர்கள் வரை பலர் இன நல்லிணக்கம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தனர். 


குறிப்பாக கண்டி சிட்டி ஜம்மிஜயத்துல் உலமா சபை சார்பாக மௌலவி பஸ்லுல், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் பீடாதிபதியுமான குலசூரிய, கலாநிதி ஜெகான் பெரேரா, முன்னாள் நீதியரசரும் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான பீ.பி.வராவௌ, பேராசிரியர் அமரகீர்த்தி லியனகே, இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த சிவஞானம், பேராசிரியரும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகப் பதிவாளருமான கலாநிதி எம்.பி. அதிகாரம், முன்னாள் கண்டி மாவட்ட அரச அதிபர் ஏ.எம், எல்.பி. பொல்கொல்ல, பெரிஸ்டர் சீ.வர்ணசூரிய, சட்டத்தரணி சீ.எம்.ஹாத்திம் உற்பட பௌத்த, கத்தோலிக்க மதகுருக்கள் சிவில் சமுகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலரும் இங்கு கருத்துக்களைத் தெரிவித்ததுடன் பிரேரணைகளை எழுத்து மூலம் முன்வைத்தனர். 

மேற்படி அமர்வு கண்டி டெவோன் ஹோட்டலில் நேற்றைய தினம் இடம் பெற்றது.

-JM Hafees

No comments:

Post a comment