பிரித்தானிய ரக்பி வீரர் இலங்கையில் மரணம்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

பிரித்தானிய ரக்பி வீரர் இலங்கையில் மரணம்!


நட்பு ரீதியான ரக்பி போட்டியொன்றில் கலந்து கொள்ளும் நிமித்தம் இலங்கை வந்திருந்த இங்கிலாந்து ரக்பி விளையாட்டு வீரர் ஒருவர் மூச்சுத் திணறலில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 10ம் திகதி இலங்கை வந்த 22 பேர் கொண்ட இங்கிலாந்து ரக்பி அணி, சனிக்கிழமை 12ம் திகதி போட்டியை நிறைவு செய்து விட்டு அன்றிரவு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனித்தனி குழுக்களாக வெளியேறியிருந்த நிலையில் இருவர் மாத்திரம் விடியற்காலையிலேயே ஹோட்டல் திரும்பியதாகவும் அதில் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மற்றையவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment