கொழும்பு: 1000 வறிய குடும்பங்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

கொழும்பு: 1000 வறிய குடும்பங்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கி வைப்பு


லைலா உம்மா டீன் பவுண்டேசன், அல்- அஹ்ஸான் ட்ரஸ்ட் மற்றும் இளம் மாதர் முஸ்லிம் அமைப்பு ஆகியன இணைந்து புனித ரமழானை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சுமார் ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு ரமழான் காலத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.


தெமடகொட எம்.ஐ.சி.எச் மண்டபத்தில் லைலா உம்மா டீன் பவுண்டேசனின் திட்டப்பணிப்பாளர் நிஸ்தார் அனிஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் தலைவி பவாஷா தாஹா உள்ளிட்ட அமைப்பினரும், லைலா பவுண்டேசன் பணிப்பாளர் திருமதி மக்கியா முஸம்மில், மனித உரிமைகள் அமைப்பின் பெண்கள் பிரிவுப் பணிப்பாளர் ஹனியா, இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஆலோசகர் பாறுக் ஹாஜி, மருதானைப் பொலிஸ் பொறுப்பததிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment