முறையாகத் திட்டமிட்டு 'லஞ்சத்தை' கொடுத்த இந்திய வர்த்தகர்! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

முறையாகத் திட்டமிட்டு 'லஞ்சத்தை' கொடுத்த இந்திய வர்த்தகர்!


56 கோடியில் ஆரம்பித்து 20 கோடி ரூபா வரை லஞ்சப் பேரம் நடாத்தி அதில் 2 கோடி ரூபாயை முற்பணாமகப் பெற முயன்ற நிலையில் கைதான ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.கே. மகநாமவை இந்திய வர்த்தகரே வலையில் சிக்க வைத்துள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 23,000 ஏக்கர் நிலத்தினை குறித்த வர்த்தகருக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் அங்கிருந்த கட்டிடம் மற்றும் உபகரணங்கள் குறித்து அவ்வனுமதியில் தெளிவுபடுத்தப்படவில்லையெனவும் அதனால் அதனை வழங்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அப்போது (2017) காணியமைச்சின் செயலாளராக இருந்த மகநாம பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் குறித்த நபர் வழக்கொன்றைப் பதிவு செய்துள்ள நிலையில், இவ்விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளவே லஞ்சப் பேரம் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 20 கோடி ரூபா லஞ்சத்தை வழங்க இணங்கிக் கொண்ட இந்திய வர்த்தகர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் திட்டமிட்டு காய் நகர்த்தி மகநாமவை கையும் களவுமாக பிடிக்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment