யாழ் நைனாதீவு பள்ளிவாசலில் பொது கிணறு திறந்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

யாழ் நைனாதீவு பள்ளிவாசலில் பொது கிணறு திறந்து வைப்புயாழ்ப்பாணம் தீவகப்பகுதியில் உள்ள  நையினாதீவு ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில்  பொதுக்கிணறு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டது. 

யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமின்  தலைமையில் நேற்று (06) குறித்த கிணறு திறந்து வைக்கப்பட்டது. இதன் போது சமூக சேவையாளரும் Tearz அமைப்பின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நிசார் உட்பட பலரும்  கலந்து கொண்டனர். குறித்த கிணறு  கொழும்பு Tearz அமைப்பின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Farook Sihan

No comments:

Post a Comment