இரு தரப்பும் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

இரு தரப்பும் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளது!அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மனித உரிமைகள் மையத்தின் கீர்த்தி தென்னக்கோன்.தயாசிறி 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானதையடுத்து 118 பேர் இதில் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆகக்குறைந்தது இரு தரப்பிலிருந்தும் 16 பேர் பணம் பெற்றிருப்பதாக கீர்த்தி தகவல் வெளியிட்டுள்ளமையும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகி ஆறு மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment