ஹிஜாப் ஆடை வடிவமைப்பாளருக்கு 18 வருட சிறை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

ஹிஜாப் ஆடை வடிவமைப்பாளருக்கு 18 வருட சிறை!


தனது ஆடைக் கண்காட்சிகளில் அனைத்து பெண்களையும் ஹிஜாபுடன் காட்சிப்படுத்தி சர்வதேச ரீதியில் பிரபலம் பெற்ற இந்தோனேசிய ஆடை வடிவமைப்பாளர் அனிசா ஹசிபுன் மற்றும் அவரது கணவருக்கு 18 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


உம்ரா பயண முகவர் நிறுவனம் ஒன்றை நடாத்திய குறித்த நபர் சுமார் 60 மில்லியன் டொலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதன் பின்னணியில் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆடை வடிவமைப்பின் முன்னணி நபராக அனிசா உருவகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இம்  மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment