அநுராதபுர சர்ச்சை; சஜித் பிரேமதாச மீது 'புதையல்' குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

அநுராதபுர சர்ச்சை; சஜித் பிரேமதாச மீது 'புதையல்' குற்றச்சாட்டு!


அநுராதபுரம், விஜித புர பகுதியில் பௌத்த புராதன பிரதேசமாகக் கருதப்படும் இடமொன்றில் குடியிருப்பு அமைக்கத் திட்டமிடுவதாக உருவான சர்ச்சையின் பின்ணியில் சஜித் பிரேமதாசவே இருப்பதாகவும் அங்கு அவர் புதையல் தோண்ட முனைந்ததாகவும் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த பகுதியின் பிரதேச செயலாளராக சாஜிதா பானு என அறியப்படும் முஸ்லிம் பெண் அதிகாரியே கடமையாற்றுகின்ற நிலையில் முதலில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், பிரதேச சபை நிலத்தை அடையாளம் காணும் பணியை மாத்திரமே செய்ததாகவும், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதியிலன்றி வேறு ஒரு இடத்திலேயே சுத்திகரிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் குறித்த அதிகாரி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், வீடமைப்பு அதிகார சபையே இதன் பின்னணியில் இருப்பதோடு தவறுக்கு பொறுப்பேற்றுமுள்ள நிலையில் சஜித் பிரேமதாச புதையல் தோண்ட உத்தரவிட்டதாக பிரதேச அரசியல்வாதிகள் குற்றச்சாட்டு வெளியிட ஆரம்பித்துள்ளமையும் குற்றவாளியைக் கண்டு தண்டனை வழங்க வேண்டும் என ஞானசார உட்பட்ட கடும்போக்குவாத துறவிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IVTD2sB

No comments:

Post a Comment