நள்ளிரவு முதல் எரிபொருள் விலையும் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையும் உயர்வு!


சமையல் எரிவாயு 245 ரூபாவால் அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 137 ரூபாவாகவும் டீசல் 109 ரூபாவாகவும் மண்ணெண்ணை 101 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  95 ஒக்டேன் பெற்றோலின் விலை 148 ரூபாவாகவும் சுப்பர் டீசலின் விலை 119 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனம் அண்மையில் விலையை உயர்த்தியிருந்த போதிலும் இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையுயர்த்தப் போவதில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்குது.

No comments:

Post a comment