கடமைகளைப் பொறுப்பேற்ற அலி சாஹிர் - ஹரீஸ்! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

கடமைகளைப் பொறுப்பேற்ற அலி சாஹிர் - ஹரீஸ்!


அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட எச்.எம்.எம். ஹரீசும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசாஹிர் மௌலானாவும் இன்று தமது அமைச்சுக்களில் பதவிப் பிரமானம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.


அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அலிசாஹிர் மௌலானா உள்வாங்கப்பட்டுள்ள அதேவேளை ஹரீசின் அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமை குறித்து லண்டனில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது முஸ்லிம்களுக்குத் தான் 'பதவிகளை' அள்ளி வழங்கி வருவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment