ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 21 May 2018

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!


கடும் மழை பெய்து வரும் நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


கேகாலை, களுத்துறை, கண்டி, நுவரெலிய மற்றும் ரத்னபுர மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களனி, நில்வலா உட்பட அனைத்து நதிகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment