இலங்கைக்குள் சட்டவிரோதமாக புக முயன்ற இந்தியர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

இலங்கைக்குள் சட்டவிரோதமாக புக முயன்ற இந்தியர்கள் கைது!


இலங்கைக்குள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேர் தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் அடங்கிய இக்குழு பயணித்த வள்ளம் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலுதவிகள் வழங்கப்பட்ட நிலையில் தலைமன்னார் பொலிசாரிடம் குறித்த குழுவினர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment