டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா - sonakar.com

Post Top Ad

Monday, 21 May 2018

டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா


ஆறு வருடங்களின் பின் டமஸ்கஸ் மற்றும் நகரை அண்மித்த அனைத்து பகுதிகளும் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது சிரிய அரசாங்கம்.அசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு வழங்கி வந்தது. எனினும், ரஷ்யாவின் தலையீடு கள நிலைமையை மாற்றியமைத்துள்ள நிலையில் பெரும்பாலான இடங்களிலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் பின்வாங்கியும் சரணடைந்தும் வருகின்றன.

இந்நிலையில், தலைநகரை அண்டிய அனைத்துப் பகுதிகளையும் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் இராணுவ சிப்பாய்கள் நிலை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment