20ம் சட்டத் திருத்தம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 May 2018

20ம் சட்டத் திருத்தம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கோரும் 20ம் திருத்தச் சட்டப் பிரேரணை இன்று நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.


தனி நபர் பிரேரணையாக முன் வைக்கப்படுகின்ற குறித்த திருத்தச் சட்டத்தின் மூலம் கூட்டாட்சி அரசு வாக்களித்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

எனினும், நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கான மாற்றீட்டை இதுவரை முன் வைத்து, சட்டங்களை உருவாக்கவில்லையென அண்மையில் மைத்ரி தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment