தொற்றுநோய்: தெற்கில் பாலர் மற்றும் கனிஷ்ட பாடசாலைகளுக்கு விடுமுறை! - sonakar.com

Post Top Ad

Monday, 21 May 2018

தொற்றுநோய்: தெற்கில் பாலர் மற்றும் கனிஷ்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!


தெற்கில் இனங்காணப்படாத வைரஸ் தொற்றுநோய் பற்றிய தகவலின் பின்னணியில் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ள அனைத்து பாலர் மற்றும் கனிஷ்ட பாடசாலைகளுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அனைத்து பாலர் பாடசாலைகளும் 27ம் திகதி வரை மூடப்படுகின்ற அதேவேளை கனிஷ்ட பாடசாலைகள் இரு நாட்கள் முதற்கட்டமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம் உட்பட தென் மாகாணத்தின் பல இடங்களில் இவ்வாறு வைரஸ் தொற்று நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுவதையடுத்து முன்னெச்சரிக்கையாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாகாண கல்வி செயலாளர் விக்கிரமசிறி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment