இந்தியா: ஒரே வாரத்தில் மூன்று இளம் பெண்கள் மீது வன்புனர்வு - எரியூட்டல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

இந்தியா: ஒரே வாரத்தில் மூன்று இளம் பெண்கள் மீது வன்புனர்வு - எரியூட்டல்!


12 வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக தூக்குத் தண்டனை வழங்கவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒரே வாரத்தில் 16 மற்றும் 17 வயதான மூன்று இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.



மத்திய பிரதேசம், ஜுஜாபூர் எனும் கிராமத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 28 வயது ரவி சந்தர் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னதாக ஜர்கந்த் பகுதியில் எரியூட்டப்பட்ட 17 வயது இளம் பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ள அதேவேளை அதே பகுதியில் மேலும் ஒரு 16 வயது சிறுமி பாலியல் வன்புனர்வுக்குள்ளாக்கப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment