யாழ்: முஸ்லிம் பகுதியில் நட்சத்திர ஹோட்டல் அமைக்க எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

யாழ்: முஸ்லிம் பகுதியில் நட்சத்திர ஹோட்டல் அமைக்க எதிர்ப்புயாழ், யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் ஜின்னா வீதியில் அமைந்துள்ள ஹலீமா ஒழுங்கையில் குளோபள் டிரேடிங் குரூப் என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதிக்கான கட்டிட நிர்மானத்திற்கு எதிராக குறித்த பிரதேச மக்கள் இன்றைய தினம் (12-05-2018) சனிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.


பள்ளிவாசல், முஸ்லிம் பெண்கள் பாடசாலை அமைந்துள்ள பொது இடத்திற்கருகில் இவ்வாறான ஹோட்டல் அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தெரிவிக்கின்ற அதேவேளை வறுமையில் வாடும் முஸ்லிம் மக்களின் காணிகளை அற்ப விலைக்கு கொள்வனவு செய்து சதி நடப்பதாக மாகாண சபை உறுப்பினர் அயுப் அஸ்மினும் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த விவகாரத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாக அரசியல்வாதிகள் தற்போதைக்கு 'சூளுரைத்து'ள்ளமை குறிப்பிடத்தக்கது.

-NM Abdullah / Farook Sihan

No comments:

Post a Comment