சீரற்ற காலநிலை: பாடசாலைகள் குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம் - sonakar.com

Post Top Ad

Monday, 21 May 2018

சீரற்ற காலநிலை: பாடசாலைகள் குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம்


நாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பாடசாலைகளைத் திறப்பது குறித்து அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பொறுப்பாளர்கள் தீர்மானிக்கலாம் என தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

இதேவேளை, ரத்னபுர, தெஹியோவிட்ட, நிவித்திகல வலயங்களில் இன்றும் நாளையும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment