ஹிருனிகாவுக்கு ஐ.தே.கட்சிக்குள் எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

ஹிருனிகாவுக்கு ஐ.தே.கட்சிக்குள் எதிர்ப்பு!


இரத்மலானை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹிருனிகாவால் அங்கு எந்தப் பயனும் இல்லையெனவும் இருந்த வாக்கு வங்கியும் சரிந்து போயுள்ளதாகவும் அப்பகுதி ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் தொகுதியில் 27,000 வாக்குகள் பெறப்பட்ட அதேவேளை பொதுத்தெர்தலில் 26,000 வாக்குகள் கட்சிக்குக் கிடைத்திருந்ததாகவும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அது 17,000 மாக குறைந்து போயுள்ளதாகவும் அது ஹிருனிகாவின் செயற்திறனற்ற நிர்வாகத்தினால் வந்த விளைவு எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

பின் வரிசை உறுப்பினர்களுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் அண்மையில் ஹிருனிகா கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment